Archive for the ஊர் செய்திகள் Category

வி.களத்தூர் மாணவன் மாவட்ட அளவில் சாதனை !

Posted on October 24, 2014 by

பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் வெள்ளிக்கிழமை (17-10-2014) அன்று நடைபெற்று இதில் வி.களத்தூரை சேர்ந்த ஜாஸிம் என்ற மாணவன் த/பெ ஜாகிர் உசேன் (ஜாஸிம் எலெக்ட்ரிகல்ஸ்) முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் விஸ்டம் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார். வி களத்தூர் டாட் காம் சார்பாக மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

Continue Reading

வி.களத்தூர் வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்!

Posted on October 24, 2014 by

பெரம்பலூர் மாவட்டத்தில், அக். 26-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2015-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.10.2014 முதல் 10.11.2014 வரை நடைபெறுகிறது. அதன்படி, 1.1.2015-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியான நபர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் [...]

Continue Reading

வி.களத்தூரில் வேகமாக பரவும் மெட்ராஸ்-ஐ !

Posted on October 24, 2014 by

‘மெட்ராஸ்-ஐ’ கண் நோய் வி.களத்தூரில் வேகமாக பரவி வருகிறது. ‘மெட்ராஸ்-ஐ’ பாதித்தவர்களை மற்றவர்கள் பார்த்தாலே தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறாக கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். கண்ணில் இருந்து நீர் வடியும். அதிக உறுத்தல் இருக்கும். காலையில் கண் விழிக்கும்போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். இதுதான் இந்நோயின் அறிகுறிகளாகும். கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் [...]

Continue Reading

வி.களத்தூரைச் சேர்ந்த S.ஜெரினா என்ற பெண்மணி காணவில்லை!!

Posted on October 23, 2014 by

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரரை சேர்ந்த எலெக்ட்ரிசியன் s. முபாரக் பாய் அவர்களின் அக்கா s.ஜெரினா அவர்கள் காணவில்லை. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். சிகிச்சைக்காக தனது மகளுடன் திருச்சி சென்றபோது கூட்ட நெரிசலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணமல் போய் விட்டார். இவரை பார்பவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தெரிவிக்கவும் தொலைபேசி எண்: s. முபாரக் பாய் 9943882893 9677374802 9626089484

Continue Reading

வி.களத்தூர் ரேசன் கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை -தமுமுக முற்றுகை!

Posted on October 22, 2014 by

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் ரேசன் கடையில் நேற்று (20-10 -2014) அன்று துவரம் பருப்பு விநியோகம் செய்யப பட்டது. அப்போது கூடவே தனியாக (ரேசன் சேல்ஸ்மேன் வியாபாரம்) ரவா பாக்கெட், மைதா பாக்கெட் மற்றும் குளியல் சோப்பு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் விற்பனை செய்துள்ளார். அந்த பொருட்களில் ரவா,மைதா காலாவதியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது மேலும் குளியல் சோப்பில் தேதியே அச்சிடாமல் இருந்தது.. இதனிடையே இந்த தகவல் தமுமுக நிர்வாகிகளுக்கு நேற்று [...]

Continue Reading

வி.களத்தூரில் “ஆரோக்கியமான மக்கள் வளமையான தேசம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள்!

Posted on October 17, 2014 by

நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னையும் வளப்படுத்தி, பலப்படுத்தி பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாத்திடவும் சிந்தனைகளை ஏற்படுத்திட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் தேசம் தழுவிய அளவிலே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் “ஆரோக்கியமான மக்கள் வளமையான தேசம்” என்ற முழக்கத்துடன் இப்பிரச்சாரம் [...]

Continue Reading

வி.களத்தூரில் இன்று ரத்ததான நன்கொடையாளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

Posted on October 17, 2014 by

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக அக்டோபர் 17 மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக  இரத்ததான கொடையாளர்கள் சேர்க்கும் முகாம் இன்று (17.10.2014) ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் உதிரம் கொடுத்து உயிரைக் காக்கும் இந்த உன்னதமான பணியில் தங்களின் பெயர்களையும் [...]

Continue Reading

வி.களத்தூர் அருகே குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது!

Posted on October 17, 2014 by

பெரம்பலூர்,: வி.களத்தூர் அருகே குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அடுத்த வண்ணாரம்பூண்டியை சேர்ந்தவர் சுரேஷ்(32). சென்ட்ரிங்தொழிலாளி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் சுரேஷ் மீது மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட எஸ்பி சோனல்சந்திரா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் தரேஸ் அகமது உத்தரவினை தொடர்ந்து சுரேஷை, பெரம்பலூர் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது [...]

Continue Reading

வி.களத்தூரின் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல்!

Posted on October 16, 2014 by

தமிழக தேர்தல் ஆணையம் நேற்று (oct 15) வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வ .களத்தூர் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு.. இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது. 1.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ): ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.1-நடுத்தெரு வார்டு 1 2-தெற்கு தெரு வார்டு 1 99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள் http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf  2.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ): ஊராட்சி ஒன்றிய [...]

Continue Reading

வி.களத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்!

Posted on October 15, 2014 by

வி.களத்தூரில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய வரைவுவாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் நம் பெயர் வாக்காளர்பட்டியலில் உள்ளதா எனவும் அறியலாம். வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நாளை  17- 10-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

Continue Reading

வி.களத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இஸ்லாத்தை பற்றி தெரியாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்

Posted on October 15, 2014 by

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அக்டோபர் 13,14, 2014 ஆகிய இரண்டு நாட்கள் அறிவகம் தஃவா குழு இஸ்லாத்தை பற்றி தெரியாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். TNDFT அறிவகம் தஃவா குழு கடந்த 20 வருடமாக தமிழகத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தினை அறிமுகம் செய்து வருகிறார்கள்.   கிராமங்கள் தோறும் தவாடூர், சுற்றுலா தளங்களில் மக்களை சந்திப்பது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அழைப்பு பணி செய்வது, பெருநாள் சந்திப்பு மூலமாக மக்களை [...]

Continue Reading

வி.களத்தூரில் இன்று(12-10-2014) கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது

Posted on October 12, 2014 by

வி.களத்தூரில் இன்று(12-10-2014) காலை சுமார் 11.00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவி நூருல் ஹுதா மற்றும் துணைத் தலைவர் ஜமால் தீன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.             களத்தில் -நமது செய்தியாளர்  Star Studio ஹசன்

Continue Reading

Update Photos: வி.களத்தூரில் தற்போது நடைப்பெற்று கொண்டு இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் புகைப்படம்!

Posted on October 11, 2014 by

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வி.களத்தூர் கிளை யின் சார்பாக  11-10-2014 சனிக்கிழமை இன்று  நடுத்தெரு கடைவீதி கார்னர் பகுதியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்று கொண்டு இருக்கும் புகைப்படம் சிறப்புரை சகோ .K.S அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி (TNTJ மாநில தணிக்கை குழு ) அவர்கள் ஷிர்க்கும்,பித்அத்தும் என்ற தலைப்பிலும் ,சகோ.M.S செய்யது இப்ராஹிம் (TNTJ மாநில துணை தலைவர்) அவர்கள் குர்ஆனும்,விஞ்ஞானமும் என்ற தலைப்பிலும் உரை யாற்றுகிறார்கள்.      

Continue Reading

வி.களத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Posted on October 11, 2014 by

திருவாலந்துறையை சேர்ந்தவர் நடராஜன் மகன் செல்லதுரை (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவாலந்துறையிலிருந்து வி.களத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார்.அப்போது வி.களத்தூரை சேர்ந்த முத்துசாமி மனைவி சின்னப்பிள்ளை ( வயது 70 ) வண்ணாரம்பூண்டி நோக்கி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது சின்னப்பிள்ளை மீது செல்லதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னப்பிள்ளை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் [...]

Continue Reading

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted on October 11, 2014 by

பெரம்பலூர் மாவட் டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியாளர்கள், குறு அங்கன்வாடி மைய பணியாளர் மற் றும் அங்கன்வாடி உதவியாளர் பணி யிடங்களுக்கு விண் ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தரேஸ் அஹ மது தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- காலிப்பணியிடங்கள் பெரம்பலூர் மாவட் டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் தின் கீழ் 55 அங்கன்வாடி மையப் பணியாளர்கள், 2 குறு அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் 77 [...]

Continue Reading

வி.களத்தூரில் இன்று பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆணையக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம்!

Posted on October 9, 2014 by

வி.களத்தூரில் இன்று (9/10/2014) மாலை 6 மணியளவில் பெண்கள் நடுநிலைப்பள்ளி யில் பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆணையக்குழு நடத்தும் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.      

Continue Reading

மில்லத் நகர் ஈத்கா திடலில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை!

Posted on October 7, 2014 by

மில்லத் நகர் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஈத்கா திடலில் காலை 8.15 மணியளவில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது.              

Continue Reading

வி.களத்தூர் TNTJ மர்க்கஸில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை!

Posted on October 7, 2014 by

வி.களத்தூர் TNTJ மர்க்கஸில் நேற்று காலை 7.00 மணியளவில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது .            

Continue Reading