வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸில் ஈத் பெருநாள் தொழுகை!

Posted on July 29, 2014 by

வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸில் காலை 7.00 மணியளவில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது.                  

Continue Reading

வி.களத்தூரில் நடைபெற்ற ஈத் பெருநாள்!

Posted on July 29, 2014 by

வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் காலை 9.00 மணியளவில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இத் தொழுகையினை பள்ளியின் இமாம் முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்கள் நடத்தினார்.              

Continue Reading

மில்லத் நகரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

Posted on July 29, 2014 by

மில்லத் நகர் ஜும்மா பள்ளிவாசல் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இத் தொழுகையினை பள்ளியின் இமாம் அசரப் அலி அவர்கள் தொழும் முறைகளை கூறி தொழுகை நடத்தினார்.                        

Continue Reading

அஜ்மானில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

Posted on July 28, 2014 by

அமீரகம் – அஜ்மானில் வி.களத்தூர் மக்கள் மிக சிறப்பாக இந்த ரம்ஜான் ஈத் பெருநாளை கொண்டாடினார்.            

Continue Reading

ஜுமைராவில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

Posted on July 28, 2014 by

துபாய் -ஜுமைரா பகுதியில் நமது ஊர் மக்கள் ரம்ஜான் ஈத் பெருநாளை இன்று அதிகாலை 6 மணிக்கு ஜுமைரா பள்ளியில் தொழுது சிறப்பாக இந்த ஈத் பெருநாளை கொண்டாடினார்.              

Continue Reading

கத்தாரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

Posted on July 28, 2014 by

கத்தாரில் இன்று (28.07.2014) ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை சரியாக 5.15 மணிக்கு சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. அமீரகத்தை போல் கத்தாரில் நமதூர் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதனால் அவர்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே தமது தொழுகையை நிறைவேற்றினார்கள்.                    

Continue Reading

ராசல்கைமாவில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

Posted on July 28, 2014 by

ரம்ஜான் பெருநாளையொட்டி ராசல்கைமாவிலுள்ள ஈத்கானா மைதானத்தில் காலை 6.10 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ராசல்கைமாவிலுள்ள பெரும்பாலான நமதூர்வாசிகள் இந்த ஈத்கானாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.                  

Continue Reading

சவூதி ரியாத்தில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்

Posted on July 28, 2014 by

சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் நமது ஊர் மக்கள் மிக சிறப்பாக ரம்ஜான் ஈத் பெருநாளை கொண்டாடினார்கள்.          

Continue Reading

அமீரகத்தில் ஈத் பெருநாள் கொண்டாட்டம் !

Posted on July 28, 2014 by

அமீரகம் துபையில் இன்று 28/07/2014 திங்கள் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. டேரா துபை ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் வி.களத்தூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நம்வி.களத்தூர் சகோதரர்களில் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானம் நோக்கியே தொழுவதற்காக வருவார்கள். சுமார்  ஒரு இலட்சம்  மேற்ப்பட்டோர் வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் [...]

Continue Reading

பொது சேவைக்கு பாராட்டு !

Posted on July 28, 2014 by

மில்லத் நகர் படிக்கட்டு பகுதியில்  ஆண்டு பெய்த மழையின் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு படிக்கட்டு பகுதியல் உள்ள மணல் அனைத்தும்  செல்லப்பட்டு பாறையாக தெரிந்தது .இதனால் அந்த பகுதி பள்ளமாக காணப்பட்டது .முதியோர் மற்றும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடப்பதற்கு பயமாகவும் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்ப்பட்டது. இதனை மில்லத் நகர் பகுதியை சேர்ந்த ஓர் இளைஞர் தன் சொந்த செலவில் ஜேசிபி வாகனம் மூலம் அந்த பகுதியை சீர் செய்தார்.இது போன்ற பொது சேவை [...]

Continue Reading

காஸா தேவாலயத்தில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள்

Posted on July 27, 2014 by

காஸாவில் அமைதி நிலவ வேண்டி அங்குள்ள முஸ்லிம்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகை நடத்தி வருகின்றனர். காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரில் உள்ள புனித போர்பைரியஸ் தேவாலயத்தில் ஏராளமான பாலஸ்தீனர்கள் தஞ்ச மடைந்துள்ளனர். அவர்கள் தேவாலயத்திலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மெஹ்மூத் காலப் என்ற பாலஸ்தீனர் கூறியது: இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து தேவாலயத்தில் தஞ்ச மடைந்துள்ளோம். இங்குள்ள வர்கள் எங்களை தேவாலயத்துக் குள் தொழுகை நடத்த அனுமதித் துள்ளனர். [...]

Continue Reading

மோடி விசா பிரச்சினை முடிந்துபோன விவகாரம்: அமெரிக்க மூத்த அதிகாரி கருத்து

Posted on July 27, 2014 by

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை, ஒரு கடந்த கால விஷயம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. அவருக்கு விசா வழங்க இயலும் என்பதை அறிந்த பின்புதான், அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் (தெற்கு, மத்திய ஆசியப் பிரிவு) நிஷா தேசாய் பிஸ்வால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாவது: “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை [...]

Continue Reading

போர் நிறுத்தத்தை 24 மணி நேரம் நீட்டித்தது இஸ்ரேல்

Posted on July 27, 2014 by

ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளையில், காஸாவைத் தாக்கும் இஸ்ரேல் டேங்கர்கள் வாபஸ் பெறும் வரை, ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இணங்க முடியாது என்று ஹமாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பலி 1000-ஐ எட்டியது கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் [...]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காஸாவில் பாலஸ்தீனர்கள் பலி 800 ஆக அதிகரிப்பு

Posted on July 25, 2014 by

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 18-வது நாளாக நேற்று காஸாவின் பல்வேறு இடங்களில் ஏவுகணை வீச்சுகளும், குண்டுவீச்சுகளும் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்டன. நேற்றைய தாக்குதலில் மட்டும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் அவசரகால உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்-அல்-காத்ரா தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், 3 அப்பாவி பொதுமக்களும், தாய் நாட்டவர் ஒருவரும் [...]

Continue Reading

116 பேருடன் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிப்பு

Posted on July 25, 2014 by

மாயமான ஏர் அல்ஜீரியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.எச்.5017 விமானத்தின் உடைந்த பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸுக்கு ஏ.எச்.5017 விமானம் நேற்று (வியாழக்கிழமை) புறப்பட்டது. கிளம்பிய சுமார் 50 நிமிடத்திலேயே விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மறைந்துவிட்டது. மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மாலி பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் மாயமானது. அடுத்த சில மணி நேரத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியது [...]

Continue Reading

யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted on July 25, 2014 by

யு.பி.எஸ்.சி தேர்வு சர்ச்சையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். யு.பி.எஸ்.சி. தேர்வு வாரியம் நடத்தும் திறனறி தேர்வு (CSAT – Preliminary aptitude test) இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக அமையும் எனக் கூறி டெல்லியில் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடைமுறை 2011-ல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலப் புலமை உள்ள மாணவர்களுக்கு [...]

Continue Reading

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து: 11 மாணவர்கள் பலி

Posted on July 24, 2014 by

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 11 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் பேருந்து [...]

Continue Reading

நோன்பு இருந்தவருக்கு உணவு திணித்தது தவறு: அத்வானி கண்டிப்பு

Posted on July 24, 2014 by

ரம்ஜான் நோன்பு இருந்த ஒருவரை சிவசேனை கட்சி எம்.பி.க்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தது தவறு என பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனை எம்.பி.,க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். [...]

Continue Reading